என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எருது விடும் விழா
நீங்கள் தேடியது "எருது விடும் விழா"
காரிமங்கலம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். #jallikattu
காரிமங்கலம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ராமாபுரம் பகுதியில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் 12 கிராமங்களை சேர்ந்த எருதுகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாடுகள் இழுத்து வரும் நிலையில் வேடிக்கை பார்த்து வந்தவர்கள் அங்குமிங்கும் ஓடினர்.
இதில் மாடு ஒன்று முட்டியதில், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காரிமங்கலம் அடுத்த கீழ்கொள்ளுப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரவி (37) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #jallikattu
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதை தடுக்க சென்ற போலீசார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெறுவதாக கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல் துறையிடம் முன்அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் எருது விடும் விழாவிற்காக சுமார் 300 காளைகள் அழைத்து வரப்பட்டன. மேலும் விழாவை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இங்கு எருது விடும் விழா நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே விழா நடத்த கூடாது என்று கூறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.
ஆனால் இளைஞர்களோ செல்ல மறுத்து போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.
இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். கடந்த ஆண்டும் இதே போல எருது விடும் விழாவின் போது மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

×

X